பழனி மலைக்கோயிலுக்கு இயக்கப்படும் ரோப் கார் திடீர் பழுது - நீண்டநேரம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதி

May 1 2022 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டம் பழனி மலைக்‍கோயிலுக்குச் செல்லும் ரோப் கார் திடீரென பழுதடைந்ததால், பக்‍தர்கள் அவதிக்‍கு உள்ளாகினர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனிக்கு வரும்‌ பக்தர்கள்‌ மலைக்கோவிலுக்கு எளிதாக மேலே சென்றுவர, படிப்பாதை மட்டுமின்றி மின்இழுவை ரயில் மற்றும் ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதனால் ரோப்கார் மற்றும் மின் ‌இழுவை ரயிலில் செல்ல கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், திடீர் பழுது காரணமாக ரோப்கார் நின்றது. இதனையடுத்து பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 2 மணிநேரம் பக்தர்கள், மலைக்கோவிலுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். பழுது சரிசெய்யப்பட்ட பின்னர் ரோப்கார் மீண்டும் இயக்கப்பட்டது. நீண்டநேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00