இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் நடத்திய பாரம்பரிய திருவிழா - ஆண்டிப்பட்டி அருகே முத்துமாரியம்மன் கோவிலில் பறவைக்காவடி எடுத்து வழிபாடு

May 2 2022 2:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பி தேனி மாவட்டத்தில் வசிக்‍கும் இலங்கைத் தமிழர்கள், தங்களது பாரம்பரிய முறைப்படி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை, பறவைக்‍காவடி எடுத்து வழிபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அன்னை இந்திரா நகர். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் அங்கிருந்து தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்கள், ஆண்டுதோறும் இலங்கையில் உள்ளது போன்றே அதே வடிவமைப்பில், அன்னை இந்திரா நகர் பகுதியில் முத்து மாரியம்மன் கோயிலை அமைத்து சித்திரைத் திருவிழாவை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுத் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் பால்குடங்களை சுமந்து சென்றனர். குழந்தை வரம் வேண்டியும், நோய்ப்பிணி நீங்க வேண்டியும், பலர் அக்னிசட்டி ஏந்தி பக்தி பரவசத்துடன் ஆடியபடி சென்றனர். 20 அடி நீளத்தில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பின்னர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை பக்‍தர்கள் செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00