தருமபுரம் ஆதினம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்‍கப்பட்ட தடை நீக்‍கம் - ஆன்மீக தரப்பினரின் கடும் எதிர்ப்பைத்தொடர்ந்து உத்தரவை திரும்பப்பெற்றது தமிழக அரசு

May 8 2022 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரம் ஆதினம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்‍கப்பட்ட தடை நீக்‍கப்பட்டப்பட்டுள்ளது. ஆன்மீன தரப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து, தமிழக அரசு தடையை நீக்‍கி உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கி.பி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது நடைபெற்று வருகிறது. அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, வீதியுலா செல்வது வழக்கம். இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு கடந்த 27-ம் தேதி மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தடையை நீக்கும்படி பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று, மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பா.ஜ.க-வினரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் தெரிவிக்‍கப்பட்டதையடுத்து, தருமபுரம் ஆதினம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்‍கப்பட்ட தடை நீக்‍கப்பட்டப்பட்டிருப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00