திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் : 2 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

May 13 2022 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம், இன்று காலை நடைபெற்றது, மலைக்கோட்டை தாயுமான சுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில், அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மற்றொரு தேரில், மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக சண்டிகேஷ்வரர் பரிவாரா மூர்த்திகள், சிறு தேரில் சென்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நான்கு சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்த தேர், இறுதியாக தாயுமானவர் சன்னதியை சென்றடைந்தது. தேரோட்டம் நடைபெற்ற பகுதிகளில், முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00