கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - விஐபி தரிசனம் அதிரடி ரத்து
May 15 2022 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறை காரணமாக, பக்தர்கள் கூட்டம் தற்போது அலைமோதுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறை காரணமாக, நேற்றிரவு முதல் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. திருமலையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 15 மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
300 ரூபாய் தரிசன டோக்கன்களை பதிவு செய்த பக்தர்கள், 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால், விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், தேநீர், காபி போன்றவை வழங்கப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் 81 ஆயிரத்து 107 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 21 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.