பழனியில் முருகப் பெருமானை தரிசிக்க குவிந்த பக்தர்கள் கூட்டம் - ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டதால், வின்ஞ்சில் செல்ல காத்திருக்கும் நிலை

Jun 26 2022 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டம் பழனி மலைக்‍கோயிலில், விடுமுறை தினத்தையொட்டி பக்‍தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விஞ்ச்சில் செல்வதற்காக பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்‍கின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் கிருத்திகை என்பதால், பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், விஞ்ச் சேவைக்‍காக பக்‍தர்கள், நீண்ட வரிசையில் காத்திருக்‍கின்றனர். வின்ச் சேவைக்‍கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை காலதாமதம் ஆவதால், பெரும்பாலான பக்தர்கள் படிப்பாதை வழியாக மலை மீது சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வயது முதிர்ந்த மற்றும் குழந்தைகளுடன் வருகை தந்துள்ள பக்தர்கள், படிப்பாதை வழியாக மலைமீது செல்ல முடியாததால், மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விஞ்ச் சேவை பெறுவதில், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்‍கு முன்னுரிமை அளிக்‍க வேண்டுமென கோரிக்‍கை எழுந்துள்ளது. ரோப்கார் பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்‍க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00