திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுக்கள் : பக்தர்கள் நாளை காலை 10 மணி முதல் 29 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்

Jun 26 2022 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் பல்வேறு கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மாலை 4 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் நடைபெறும். இதற்காக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து பக்‍தர்கள் காத்திருக்‍கின்றனர். இதனிடையே வருகிற செப்டம்பர் மாதத்துக்‍கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நாளை மாலை 4 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதலபாத பத்மாராதனை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குலுக்கல் முறையில் டிக்‍கெட்கள் ஒதுக்கீடு செய்யப்படும். சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ஆகியவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நாளை காலை 10 மணி முதல் 29 ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு அது பற்றிய தகவல் அவர்களுடைய செல்போனுக்கு செய்தியாக வந்து சேரும். பின்னர் பக்தர்கள் உரிய பணத்தை செலுத்தி ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00