கொரோனா மீண்டும் வேகமெடுப்பதின் எதிரொலி - பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு முககவசம் கட்டாயம்

Jun 27 2022 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முககவசம் கட்டாயமாக்‍கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முகக்கவசம் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயப்படுத்தி உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைக் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து உள்ளார்களா என கோயில் ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு மலை கோவிலுக்‍கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பக்தர்கள் ஒத்துழைப்பு தருமாறு அறநிலையத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00