கும்பகோணத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்த ஸ்ரீபாவதீப ஆஞ்சநேய சுவாமி கோவில் மகாகும்பாபிஷேகம்
Jun 28 2022 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்த ஸ்ரீபாவதீப ஆஞ்சநேய சுவாமி கோவில் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் மடத்தின் காவிரி படித்துறையில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்த ஸ்ரீபாவதீப ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகவேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. மந்த்ராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடாதிபதியான ஸ்ரீ ஸூபுதேந்திர தீர்த்த சுவாமிகள் தலைமையில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திருப்பணி உபயதாரர்களான திரு.விவேக் ஜெயராமன் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.