திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை : இருக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தனிப்பாதைக்கு பக்தர்கள் வரவேற்பு

Jun 28 2022 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய, முதன் முறையாக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில், பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்து காணப்படும். இதனால் பக்தர்கள் சுமார் 7 மணி நேரம் முதல் 10 மணி மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். பல மணி நேரம் காத்திருக்கும்போது முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால், அவர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில், கோயில் நிர்வாகம் சார்பில், முதல் முறையாக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சண்முக விலாசம் மண்டபத்தில் உள்ள துலாபாரம் வாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள தனிப்பாதையில், முதியவர்கள் அமர்ந்து செல்ல இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 60 வயது முதலான முதியவர்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து, தனிப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்யலாமென கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இலவச பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் என 2 வழிகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், முதியவர்களுக்கு தனிப்பாதையை ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00