தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Jun 7 2023 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில், திராளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட மந்தையம்மன் கோவில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியில் அகஸ்தியர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காட்டூரில் செல்லாண்டியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில், பக்தி முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் டெம்பிள் சிட்டி பகுதியில் உள்ள கற்பக விநாயகா ஆலய மஹா கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செவ்வூரில் கைலாயநாதர் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00