தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடுமபத்துடன் சாமி தரிசனம்
Jun 10 2023 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடுமபத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயிலில் நவநீத சேவை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தலைக்குளத்தில் அமைந்துள்ள 81 அடி உயரமுள்ள வெக்காளியம்மன் சிலைக்கு பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி முழக்கத்துடன் தீ மிதித்து நேர்த்திகடனை செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்பியவாறு பூக்குண்டத்தில் இறங்கி நேர்த்திகடனை செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கீரனூரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோயிலில் சாகை வார்த்தல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கூழ் குடங்களுடன் சென்று அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த மறையூரில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திகடனை செலுத்தினர்.