சபரிமலை அய்யப்பன் கோயிலில் வரும் 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் : லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Jan 8 2017 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில், வரும் 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உலக அளவில் புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன்கோயிலில் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு, சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், மகா ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

வரும், 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அய்யப்பசுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், வரும் 12-ஆம் தேதி பந்தளம் வலியகோயிக்கல் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, 14-ஆம் தேதி அய்யப்பன் கோயிலில் ஒப்படைக்கப்படும். பின்னர், திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும். அதனைத்தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் ஜோதிவடிவில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

19-ஆம் தேதி வரை படிபூஜை நடைபெறும். 20-ஆம் தேதி மன்னர் பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின்னர் நடைமூடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00