உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற மிருத்யுஞ்ஜய வேள்வி : திரளான பக்தர்கள் பங்கேற்பு

Jan 9 2017 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக நன்மை மற்றும் மழை பெய்ய வேண்டி நெல்லையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் மிருத்யுஞ்ஜய வேள்வி நடைபெற்றது.

உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், நெல்லையில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில் மிருத்யுஞ்ஜய மந்த்ர ஜபவேள்வி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள செல்வ முத்துமாரியம்மன் மற்றும் ஐயப்பன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் மூலமந்திர பாராயணம், வருணகீர்த்தி மற்றும் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கண்ணாடி சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருப்பள்ளி எழுச்சி மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, உற்சவர் கோதண்டராமர் ஆலய பிரகாரத்தில் வலம் வந்து கண்ணாடி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காரைக்கால் அடுத்த கல்லறைப்பேட் கிராமத்தில் அமைந்துள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் மூன்று ராஜாக்கள் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பெண்கள், ஆலயத்தின் முன்பு அடுப்பு வைத்து சர்க்கரைப்பொங்கலிட்டு குழந்தை இயேசுவிற்கு படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2772.00 Rs. 2965.00
மும்பை Rs. 2792.00 Rs. 2957.00
டெல்லி Rs. 2804.00 Rs. 2970.00
கொல்கத்தா Rs. 2804.00 Rs. 2967.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00