கிறிஸ்தவ தேவாலயத்தில் மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில் மும்மதங்களைச் சார்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு

Jan 9 2017 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில், மும்மதங்களைச் சார்ந்த பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

நாகை மாவட்டம் வேட்டைகாரன்இருப்பு பகுதியில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மும்மதங்களை சார்ந்த பெரியவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்கள் முறையில் வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு, கரும்புகள், மஞ்சள் செடிகள் வைத்து, படையலிட்டனர்.மதங்களை கடந்து அனைவரும் பொங்கலோ பொங்கல் எனக்கூறி பொங்கலை வரவேற்றனர்.

இதேபோன்று காரைக்கால் அடுத்த கல்லறைப்பேட் கிராமத்தில் அமைந்துள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் மூன்று ராஜாக்கள் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பெண்கள், ஆலயத்தின் முன்பு அடுப்பு வைத்து சர்க்கரைப்பொங்கலிட்டு குழந்தை இயேசுவிற்கு படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

நாகை மாவட்டத்தில் 47-ம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் நாமசங்கீர்த்தனம், அலங்கார திவ்யநாமம், நிச்சய தாம்பூலம், உஞ்சவ்விருத்தி உள்ளிட்ட சங்கீத நிகழ்ச்சிகள் அரங்கேறியது. இதனை தொடர்ந்து பரதநாட்டியம், கர்நாடக இசை கச்சேரியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

கடலூர் மாவட்டம் திருப்பாபுலியூரில் உள்ள ஸ்ரீ வரத ராஜ பெருமாள் திருக்கோவிலில்நடைபெற்ற வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று துவாதசி வரதராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் காட்சியளித்தார். பின்பு பெருமாள் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2765.00 Rs. 2957.00
மும்பை Rs. 2785.00 Rs. 2949.00
டெல்லி Rs. 2797.00 Rs. 2962.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2959.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00