சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் : திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்

Jan 10 2017 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆரூத்ரா தரிசனம் நடைபெறும். அதன்படி கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன தேரோட்டம் இன்று அதிகாலை நடைபெற்றது. அதிகாலை 6 மணியளவில் புறப்பட்ட தேரானது நான்கு வீதிகள் வழியாக வலம் வந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன்,சண்டிகேஸ்வரர் என வரிசையாக சுவாமிகள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளைய தினம் இக்கோவிலின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு மரகத கல்லால் ஆன நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை அதாவது ஆரூத்ரா தரிசனத்தின் முந்தைய நாள் மட்டும் நடராஜர் சிலையின் சந்தணக்காப்பு அகற்றப்பட்டு பால், தயிர், சந்தணம், மஞ்சள் போன்ற 32 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். இந்த அபூர்வ நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பிரசித்தி பெற்ற சுசீந்தரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் மார்கழி மாத தேர் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும், மார்கழி தேர் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டிற்கான திருவிழா, கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பது நாளான இன்று, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழச்சியில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து இன்று இரவு சப்தவர்ன காட்சியும், 10-ம் நாள் திருவிழாவான நாளை ஆரூத்ரா தரிசனமும், இரவு ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00