தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

Jan 11 2017 8:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடும், தைப்பொங்கலையொட்டி திருவிழாக்களும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அருள்மிகு புண்ணிய கோட்டீஸ்வரர் திருக்கோயிலில் புண்ணிய கோடீஸ்வரர், மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து புண்ணிகோடீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பிரதோஷ தாண்டவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொங்கல்விழா கடந்த 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காவேரியாற்றில் தீர்த்தக்குடம் எடுத்தும், அக்னிச் சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாகச் சென்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தில் அமைந்துள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி, கடந்த 2ம் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதனைத்தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது. இன்று பசுதீபாராதனை, ஆருத்ரா தரிசனம், தாண்டவ தீபாராதனை போன்றவை நடைபெற உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ADUKALAM - Jayaplus

  Sun : 19:00

 • REEL PETTI - Jaya Plus

  Sat : 18:00

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00