ஆடி முதல்நாளில் நெருப்பில் தேங்காய் சுடும் பண்டிகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாட்டம் : புதுமணத் தம்பதிகள் ஏராளமானோர் பங்கேற்பு

Jul 18 2017 9:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆடி முதல்நாளான நேற்று நெருப்பில் தேங்காய் சுடும் பண்டிகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் புதுமணத் தம்பதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு தலைஆடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

வாழ்வில் வசதங்கள் ஏற்பட வேண்டி கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில், தேங்காயை நெருப்பில் சுட்டு இறைவனுக்கு படைக்கும் விநோத நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேங்காயில் உள்ள நீரை எடுத்துவிட்டு, பொட்டுக்கடலை, பாசிப்பருப்பு, ஏலக்காய், வெல்லம் போன்றவற்றை செலுத்தி நெருப்பில் சுட்ட பின்னர் ஆற்றங்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஈரோட்டில் நடைபெற்ற தேங்காய் சுடும் பண்டிகையில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் கலந்து கொண்டு விநாயகருக்கு பிரசாதம் படைத்து வழிபட்டனர்.

இதேபோல், ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி மாரியம்மன் கோவில் அருகே ஏராளமான குடும்பத்தினர் ஒன்று கூடி மிகுந்த மகிழ்ச்சியுடன் தேங்காயை நெருப்பில் சுட்டு உண்டு மகிழ்ந்தனர்.

சேலத்தில் நடைபெற்ற தேங்காய் சுடும் பண்டிகையை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் கலந்து கொண்ட புதுமணதம்பதியினர் தலைத் தீபாவளியைப் போல், தலை ஆடியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00