தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

May 21 2019 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்ச பிரகார விழாவையொட்டி, 15-ஆம் நாளான நேற்று, வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வசந்த மண்டபத்திலிருந்து புறப்பட்டு, முக்‍கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

திருச்சி அருகே திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலய வைகாசி விழாவையொட்டி, பிரம்ம தீர்த்தமாகிய சன்னதி திருக்குளத்தில், தெப்போற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. நறுங்குழல் நாயகியுடன், எறும்பீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் கண்டருளினர். திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மனோன்மணி மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவையொட்டி, அம்மனுக்‍கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அன்ன வாகனத்தில் வலம் வந்து தீக்குழிக்கு அருகில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் நடைபெற்ற தீமிதித் திருவிழாவில், விரதமிருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00