திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா : நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Jun 10 2019 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் பிரணாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், பூத வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று, தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் பிரணாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பூத வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. விநாயகர், சுப்ரமணியர், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் பிரணாம்பிகை அம்பாள் ஆகியோர் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு தங்கத் தேர் இழுக்‍கப்பட்டது. தேரில், சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் திருக்கோவில் மைய மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தங்கத் தேரை திருக்கோவில் இணை இயக்குனர் பொறுப்பு அதிகாரி மாரிமுத்து, குடும்பத்தினருடன் தேரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பின்னர் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பக்‍தி முழக்‍கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00