காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 31-வது நாளாக பக்தர்களுக்கு காட்சிதரும் அத்திவரதர் - சயனக்‍கோலம் இன்றுடன் நிறைவு பெறுவதால் 12 மணியுடன் பொது தரிசனம் ரத்து

Jul 31 2019 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்‍கோயிலில் 31-வது நாளாக இன்று அத்திவரதர், பக்‍தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று அத்திவரதரை தரிசனம் செய்யும் நேரம் மாற்றியமைக்‍கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்‍கோயிலில் 40 ஆண்டுகளுக்‍குப் பின்னர், கோயில் குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளும் நிகழ்வு, கடந்த 1-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்‍கணக்‍கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த வைபவத்தின் 31-ம் நாளான இன்று அத்திவரதர் பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்து வருகிறார். பலவித மலர்களைக்‍ கொண்டு அலங்கரிக்‍கப்பட்டுள்ள அத்திவரதரை, திரளான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து 31 நாட்களாக சயன கோலத்தில் காட்சியளித்து வரும் அத்திவரதர், நாளைமுதல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்‍க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதற்காக, அத்திவரதரை தரிசனம் செய்யும் நேரம் மாற்றிமைக்‍கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று பகல் 12 மணி வரை மட்டுமே பக்‍தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்‍கப்படுவர். மேலும், தேவராஜப் பெருமாள் கோயிலின் கிழக்‍கு கோபுர வாசல் 12 மணிக்‍கு அடைக்‍கப்படும்.

சயன கோலத்தில் வீற்றிருக்‍கும் அத்திவரதரை தரிசனம் செய்ய கிழக்‍கு கோபுர வாசல் வழியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்‍தர்கள், 12 மணிக்‍குள் வந்தால் மட்டுமே மாலை 5 மணி வரை தரிசிக்‍க அனுமதிக்‍கப்படுவர். விஐபி பாஸ் வைத்துள்ளவர்கள், பிற்பகல் 3 மணிக்‍கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்‍கப்பட மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00