அத்திவரதர் தரிசனம் - சிறப்புப் பணியாளர்களை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு

Aug 2 2019 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்‍க நாள்தோறும் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வருகை தரும் நிலையில், வரிசையில் உள்ளவர்களை ஒழுங்குப்படுத்திடும் பணியில் சிறப்புப் பணியாளர்களை நியமிக்‍க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்‍கோயிலில் அத்திவரதர் தரிசனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்‍தர்கள் அதிக அளவில் வருகை தருவதால், அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் அனுபவம் பெற்ற திருக்‍கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்‍கோயிலில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்‍க வேண்டுமென திருக்‍கோயில்களின் செயல் அலுவலர்களுக்‍கு உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது.

இப்பணிக்‍கு அனுப்பப்படும் பணியாளர்களின் பெயர், பதவி மற்றும் திருக்‍கோயில் பெயர் போன்ற விவரங்களை காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்‍கோயிலுக்‍கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திட வேண்டும்- சிறப்புப் பணிக்‍கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 20 பேரும், மதியம் 2 மணி முதல் இரவு திருக்‍கோயில் நடை சாற்றும் வரை 20 பேருத் பணிபுரிய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், தங்களது திருக்‍கோயிலின் சீருடையுடன், தங்களுக்‍கு ஒதுக்‍கப்பட்ட தேதிக்‍கு முன்தினம், காஞ்சிபுரம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00