அத்திவரதரைக் காண லட்சக்கணக்கில் மக்கள் குவிந்ததால் திணறும் காஞ்சி நகரம் - தரிசனம் செய்ய யாரும் வரவேண்டாம் என்ற காவல்துறையின் திடீர் அறிவிப்பால் குழப்பம்
Aug 4 2019 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விடுமுறை தினத்தை முன்னிட்டு அத்திவரதரை தரிசிக்க கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் யாரும் இன்று தரிசிக்க வர வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 31ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 35வது நாளான இன்று வெந்தய நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இன்று விடுமுறை தினம் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இதற்கிடையே, கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் பக்தர்கள் இன்று வர வேண்டாம் என்று காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.