திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்ற ஆவணித் திருவிழா தேரோட்டம் - பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்று தரிசனம்

Aug 29 2019 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆவணி திருவிழா கடந்த 20 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவின் முக்‍கிய நிகழ்சியான திருதேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும், பின்னர் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி - தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட திருதேரில் எழுந்தருளினார். திருத்தேரை தமிழகம் முழுவதும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள், அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.

கோயில் தேரோட்டத்தையொட்டி, 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00