விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலை ஊர்வலம் - நீர்நிலைகள் மற்றும் கடலில் சிலைகளை கரைக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்

Sep 3 2019 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை காசிமேட்டில் விநாயகர் சிலைகளை கரைக்‍க ஆயிரக்‍கணக்‍கான மக்‍கள் குவிந்தனர். வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையுடன் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து, கடற்கரையில் வழிபட்டு, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கடலில் கரைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் பல இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்‍கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

வீடுகளில் வைத்து வழிபட்ட களிமண் விநாயகர் சிலையை, ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் சென்று காசிமேடு கடற்கரையில் வைத்து, கற்பூரம் ஏற்றியும், ஆரத்தி எடுத்தும் மகிழ்ச்சியுடன் கடலில் கரைத்தனர். விநாயகர் சிலையை கரைக்‍க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் காசிமேடு கடல் பகுதி விழாக்‍கோலம் பூண்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்‍காக வைக்‍கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. கேரள செண்டை மேளங்கள் மற்றும் பிற இசைக்‍கருவிகள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. கச்சேரிமேடு, நல்லகவுண்டம்பாளையம், கரட்டடிபாளையம் வழியாக நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுக்கு எடுத்துச் செல்லபட்டு, அங்கு ஒவ்வொரு சிலைகளாக ஆற்றில் கரைக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00