தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு : பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிப்பு

Sep 4 2019 8:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நீர்நிலை மற்றும் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி‌யை ஒட்டி, கடலூர் மாவட்டம் முழுவதும், ஆயிரத்து 398 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. மூன்றாம் நாளான இன்று, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தேவனாம்பட்டினம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

இதே போல், கோவை மாவட்டம், போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, இடையர்பாளையம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட விநாயகர் சி‌லைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகள், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் திரு.சிபி சக்கரவர்த்தி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இளைஞர்கள் அமைதியான முறையில் எடுத்துச் சென்று தாமரைக் குளத்தில் கரைத்தனர்.

மதுரை மாநகர் இந்து முன்னணி சார்பில், 225 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சிம்மக்கல் அருகே, வைகை ஆற்றில், ராட்சத கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டன.

திருப்பூர் அருகே தாராபுரத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில், 250-க்‍கும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அமராவதி ஆற்றிற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சுமார் 100 விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரைக்‍கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு முன்னதாக, அலங்கரிக்கப்பட மேடையில் பள்ளி மாணவிகளின் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00