ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி - விதிமுறைகளை மீறியதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் - திருமணம் நடந்தது தவறு - தீட்சிதர்கள் விளக்கம்

Sep 18 2019 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற திருமண சர்ச்சை விவகாரம் தொடர்பாக, கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, வரும் 23-ம் தேதி திருமணம் நடத்தியவர்கள் மற்றும் திருமண அலங்காரம் செய்தவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் திருவிழாவின்போது, சிவகாமி சமேத உற்சவர் நடராஜரை இங்கு கொலுவிருக்‍கச் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த மண்டபத்தை வேறு எந்தஒரு நிகழ்ச்சிக்கும் கோயில் தீட்சிதர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அவ்வப்போது சில ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதிக்‍கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த மண்டபத்தில், கடந்த 11-ம் தேதி நடைமுறை மற்றும் விதிமுறைகளை மீறி சர்ச்சைக்குரிய வகையில் நடந்த பட்டாசு தொழில் அதிபர் இல்ல திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், பக்தர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது கடந்த 14-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி பொருளாளர் திரு. கோபிநாத், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று தீட்சிதர்களிடம் சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது புகார் அளித்த பாஜக பொறுப்பாளர் கோபிநாத்தும் அங்கு உடன் இருந்தார். தீட்சிதர்கள் சார்பில் திருமணம் நடந்தது தவறுதான் என அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் வரும் 23-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் அன்றை தினம், கோயிலில் திருமணம் நடத்த அனுமதி பெற்றவர்கள், கோயில் திருமணத்திற்காக அலங்காரம் செய்தவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00