புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

Sep 21 2019 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், இன்று புரட்சி முதல் சனிக்கிழமையையொட்டி, பெருமாள் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே கோயிலின் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், புரட்டாசியில் மாதம் முழுவதும் விரதம் கடைப் பிடிப்பதை இந்துக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்ற நம்பிக்கை கொள்ளும் புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு.

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், அதிகாலை நடைதிறக்கப்பட்டது முதலே, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகையையொட்டி ஆலய நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00