குருப்பெயர்ச்சி விழாவையொட்டி, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகள் - ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்

Oct 29 2019 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
குருபெயர்ச்சி விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் திருக்‍கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டனர்.

குருபகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்‍கு பெயர்ச்சியாகும் குருபெயர்ச்சி விழாவையொட்டி, ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்‍கோயிலில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்‍கு சிறப்பு யாகம் நடைபெற்றது. மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, குரு பகவானுக்‍கு தங்கக்‍கவசம் அணிவிக்‍கப்பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் அதிகாலைமுதல் வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இதனிடையே, குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார ஆலயமான மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வதான்யேஸ்வரர் ஆலயத்தில், தனி சந்நதியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக்‍கவசம் சாற்றி வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

குருபெயர்ச்சியையொட்டி, திருவொற்றியூர் வடகுரு ஸ்தலமான குருதட்சிணாமூர்த்தி கோயிலில் விசேஷ ஹோமங்களும் பரிகார பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது. யாகசாலை வேள்விகள் நிறைவு பெற்று, குருதட்சிணாமூர்த்திக்கு மற்றும் யாகத்தில் வைத்த கலச நீரினால் அபிஷேகம் செய்யபட்டு சிறப்பு பரிகார பூஜைகளும் நடைபெற்றன. இதில் எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் மாறும் குரு குருப்பெயர்ச்சி, மதுரை மாவட்டம் சோழவந்தான் குருவித்துறை குருபகவான் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சன்னதியில் அமைந்துள்ள குருபகவானுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு குருபகவான் காட்சியளித்தார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00