கந்தசஷ்டி காலத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதப்பாணி திருக்கோயிலின் சிறப்புகள்

Oct 31 2019 9:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ் கடவுள் என்றே போற்றி வணங்கப்படும் முருகப் பெருமானை பிரார்த்தித்து மேற்கொள்ளப்படும் விரதங்களில், கந்தசஷ்டி விரதம் முக்கியமான ஒன்று. கந்தசஷ்டி காலத்தில், முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதப்பாணி திருக்கோயிலின் சிறப்புகளில், சில துளிகளை அறிவோம்.

அழகன் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது பழனி மலை. ஞானப் பழத்தால் எழுந்த பிரச்னையில், சிவப்பெருமானிடம் கோபித்துக் கொண்டு முருகன் வந்து நின்ற இடம் பழனி மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 450 அடி உயரம் கொண்ட பழனி மலைக் கோயிலுக்கு, 690 படிகட்டுகள் கடந்து சென்றுதான் முருகப் பெருமானை தரிசிக்க முடியும். இங்கு, தண்டாயுதபாணி என்ற சிறப்பு பெயரில் வீற்றிருப்பவர் முருகன். பழனி தண்டாயுதபாணி சிலையை வடிவமைத்தவர், 18 சித்தர்களில் ஒருவரான போகர். நவபாஷாணம் எனப்படும் 9 வகையான மூலிகைகளைக் கொண்டு போகர் உருவாக்கிய தண்டாயுதப்பாணி சிலையின் அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால், சகல நோய்களையும் தீர்க்கும் அறு மருந்து என, அனுபவ ரீதியில் பலரும் கூறி வியக்கிறார்கள். இங்கு, முருகன் கோவணத்தோடு, தண்டூன்றி, ஆண்டி கோலத்தில் நின்றாலும், அவருக்கு ராஜ அலங்காரம் செய்து வழிபடுவதுதான் பக்தர்களுக்கு மனநிறைவு. இந்தக் கோயிலின் கருவறையில் முருகன் சிலை அருகே, மரகதத்தால் ஆன சிறிய சிவலிங்கம் ஒன்றும், அதேபோல், போகர் சமாதியிலும், ஒரு மரகத சிவலிங்கமும் இருப்பது அதிசயிக்கத்தக்கதாக உள்ளது. லட்டு பிரசாதத்திற்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் எப்படி புகழ் பெற்றதோ, அதே அளவுக்கு பழனி முருகப் பெருமானின் அபிஷேக பஞ்சாமிர்தமும் பிரசித்திப் பெற்றது என்பது மிகையல்ல.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00