சபரிமலையில் பெண்கள் அனுமதிக்‍கப்பட்டது தொடர்பான வழக்‍கு - நாளை தீர்ப்பளிக்‍கிறது உச்சநீதிமன்றம்

Nov 14 2019 7:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது, நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி, சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கில், முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அனைத்து வயதினரும் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியது. இதற்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். எனினும் போலீஸ் பாதுகாப்புடன் இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி கேரளத்தை சேர்ந்த நாயர் சர்வீஸ் சொசைட்டி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகாய் வரும் 17-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில், வரலாற்று சிறப்புமிக்‍க அயோத்தி வழக்‍கில் தீர்ப்பு வழங்கினார். அதேபோல், சபரிமலை தீர்ப்பும் அதிரடியாக இருக்‍கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. முன்னெச்சரிக்‍கையாக சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00