கார்த்திகை பிறந்ததால் விரதம் தொடங்கிய பக்தர்கள் : அதிகாலை முதலே ஐயப்ப மாலை அணிந்து பக்தர்கள் பூஜை

Nov 17 2019 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
கார்த்திகை மாதம் பிறந்ததையடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.

சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள். அதன்படி கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.

சென்னை மஹாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில், ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். 48 நாள் சைவ உணவுகளை உண்டு, விரதம் மேற்கொண்டு, தை முதல் நாளில், கேரளாவில் இருக்கும் ஐய்யப்பன் கோவிலுக்கு சென்று ஐய்யப்பனை வழிப்படுவது வழக்கம். ஐய்யப்பனை நம்பிக்கையுடன் விரதமிருந்து வழிபட்டால் நன்மை நிச்சயம் வந்து சேரும் என்று ஐயப்ப மாலையிட்ட பக்தர்கள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் திருக்கோயில் மற்றும் விநாயகர் அம்மன் ஆலயங்களில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, ஐயப்ப சுவாமி பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி, தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில், ஐயப்ப பக்தர்கள் குருசாமி கையில் கொடுத்து பூஜை செய்து மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகாக நேற்று மாலை நடை திறக்கபட்டதைத் தொடர்ந்து, முக்கடல் சங்கமிக்‍கும் கன்னியாகுமரி கடலில் புனித நீராடி, பகவதியம்மன் கோவிலில், மாலை அணிந்து ஜய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். வெளி மாநில ஐய்யப்ப பக்தர்களின் வருகையால், கன்னியாகுமரி மாவட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00