ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்சிலைகள் மீட்பு : ஒரு பெண் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர்

Dec 6 2019 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் பிரசித்திபெற்ற மகாதேவர் ஆலயத்தில் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவில் பதுக்கி வைத்திருந்த, ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார், ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி மகாதேவர் உற்சவ மூர்த்தி ஐம்பொன்சிலை, உள்ளிட்ட சிலைகள், கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சிலையை கண்டு பிடிக்க பக்தர்களின் கோரிக்கை வலுத்து வந்த நிலையில், சிலையை கண்டு பிடிக்க மாவட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் விஜயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் திருவனந்தபுரம் பீமா பள்ளியைச் சேர்ந்த ஷா நவாஸ் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவன் தனது நண்பன் உசேன், தோழி சுமிதா ஆகியோருடன் சேர்ந்து, சிலைகளை திருடி கேரளாவுக்கு தப்பிச்சென்றதும், அவற்றை புராதன பொருள் விற்பனையாளரான சதிஷ் பாபுவுக்கு பேரம் பேசி விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்துவதற்காக சதீஷ்பாபு பதுக்கி வைத்திருந்த சிலைகள் மீட்கப்பட்டன. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00