கார்த்திகை தீபத் திருநாள் - ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம்

Dec 13 2019 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது.

வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை எனும் பெருந்தீபவிழா நேற்று நடந்தது. 20அடி உயரத்தில் பணை ஒலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையை வலம்வந்து நம்பெருமாள் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகே எழுந்தருளிய பின்னர் கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாளுக்கு தீபங்களைக்கொண்டு மங்களஆரத்தி காண்பிக்கப்பட்ட பின்னர் ஆலயபிரகாரங்கள் முழுவதும் நெய்தீபம் ஏற்றப்பட்டது, தொடர்ந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பெருமாள் வாசலில் எழுந்தருளி சொக்கப்பனைகொளுத்தும் வைபவத்தைக் கண்டருளினார், அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளி மங்கள ஆரத்தியுடன் இரவு மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் ஒருபகுதியாக முதல் தெப்பல் உற்சவ விழா நடைபெற்றது. அண்ணாமலையார், உண்ணாமுலைம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கிரிவலம் வருவதன் மகிமையை உணர்த்தும் விதமாக 14 கிலோமீட்டர் கிரிவலம் வந்தனர். பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஐய்யங்குளத் தெருவில் உள்ள ஐய்யங்குளத்தில் ஸ்ரீ பராசக்தியம்மன் தெப்பலில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனைகள் நடைபெற்ற பராசக்தியம்மன் தெப்பலில் மூன்று முறை ஐய்யங்குளத்தி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பராசக்தி அம்மனை வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00