நியூசிலாந்து அணியுடனான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி

Jan 24 2020 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூசிலாந்து அணியுடனான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன் ஆகியோரின் அதிரடியால் 10.5 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை நியூசிலாந்து அணி குவித்தது. முன்றோ, வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 7 ரன்களில் வெளியேறியபோதும் கே.எல்.ராகுல், விராத் கோலி ஆகியோரின் அதிரடியால் இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி பயணித்தது. இருவரும் அடுத்தது ஆட்டமிழந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 26 பந்துகளில் அரை சதம் அடித்தார். 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00