நியூசிலாந்துக்‍கு எதிரான 3-வது டி20 கிரிக்‍கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா - சூப்பர் ஓவரில் ரோஹித் ஷர்மா இரட்டை சிக்‍சர் அடித்து அசத்தல்

Jan 29 2020 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி, சமநிலையில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில், இந்திய அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்‌டன் வில்லியம்சன், இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தார். இதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ‍இவர், 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் விராட் கோலி 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, கேப்டன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி நம்பிக்‌‌கை அளித்தார். இந்திய பந்து வீச்சை சிதறடித்த அவர், அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி ஓவரில், நியூசிலாந்து அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. இதை, இந்திய பந்து வீச்சாளர் ஷமி வீசினார். முதல் பந்தில் ராஸ் டெய்லர் சிக்சர் அடிக்க, மூன்றாவது பந்தில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட, ராஸ் டெய்லர் ஆட்டமிழந்தார். இதையடுத்து, போட்டி சமநிலையில் முடிந்‌தது. இதன்பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க, சூப்பர் ஓவர் முறை நடைபெற்றது.

பந்து வீச்சாளர் பும்ரா வீசிய சூப்பர் ஓவரில், முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் எடுத்தால் ‍வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி சார்பில், ரோகித் சர்மா, ராகுல் ஆகியோர் களமிறங்கினர். சூப்பர் ஓவரை நியூசிலாந்து பந்து வீச்சாளர் சவுதி வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா இரண்டு ரன்கள் அடிக்க, மூன்றாவது பந்தில் ராகுல் பவுண்டரி அடித்தார். கடைசி இரண்டு பந்துகளில், இந்திய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, இரண்டு சிக்சர்களை ரோகித் சர்மா அடித்து இந்திய அணியை வெற்றிப் பெறச் செய்தார்.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00