யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம் - இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

Feb 4 2020 9:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப்‍ போட்டிக்கு முன்னேறிய‌து.

19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் Rohali Nazir, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஹைதர் அலி, கேப்டன் Rohali Nazir ஆகி‍யோரை தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 43 புள்ளி 1 ஓவர்களில் 172 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில், எஸ்.எஸ்.மிஸ்ரா 3 விக்கெட்டுகளும், தியாகி, பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் நல்ல துவக்கம் தந்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை இருவரும் சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால், 105 ரன்களும், சக்சேனா 59 ரன்களும் எடுத்தனர். 35.2 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன், வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00