இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி ‍வெற்றி

Feb 5 2020 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி ‍வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம், இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தார். இத்தொடரில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா விலகி உள்ளதால், இளம் வீரர்களான பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ‍ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. பிரித்வி ஷா 20 ரன்களிலும், அகர்வால், 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி, ஸ்ரோயாஸ் அய்யர் ஆகியோர், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். அரைசதம் அடித்த கேப்டன் கோலி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில், தனது முதலாவது சதத்தை பதிவு செய்த ஸ்ரோயாஸ் அய்யர், 103 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ராகுல், 88 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 347 ரன்கள் எடுத்தது.

348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு,​ தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில், நிக்கோலஸ் நல்ல தொடக்கம் தந்தனர். அரைசதம் அடித்த நிக்‍கோலஸ், 78 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பொறுப்புடன் ஆடிய ராஸ் டெய்லர், கேப்டன் டாம் லேதம் ஆகியோர், ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அரைசதம் அடித்த கேப்டன் டாம் லேதம், 69 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடித்த ராஸ் டெய்லர், 109 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். 48.1 ஓவர்களில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00