2வது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து - 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது

Feb 8 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் வலுவான தொடக்கத்தை அளித்தனர். பின்னர் வந்த வீரர்களில் ராஸ் டெய்லரை தவிர ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடி அரை சதத்தை நிறைவு செய்தார். பின்னர் வந்த வீரர்களில் ஜடேஜா மற்றும் நவதீப் சைனியை தவிர்த்து ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 251 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இதையடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. மேலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை 2க்கு பூஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00