வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா தோல்வி - 10 விக்‍கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் முன்னிலை

Feb 24 2020 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட் ​போட்டியில், நியூஸிலாந்து அணி 10 விக்‍கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் அந்த அணி டெஸ்ட் கிரிக்‍கெட்டில் தனது 100-வது வெற்றியை பதிவு செய்தது.

வெலிங்டனில், கடந்த 21-ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில், டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 165 ரன்களில் அனைத்து விக்‍கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, கேப்டன் Williamson, Ross Taylor, Grandhome, Jamieson, Trent Boult ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 348 ரன்களை எடுத்து, ஆல் அவுட் ஆனது.

183 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய சற்று நேரத்தில், நியூஸிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்‍க முடியாமல், அடுத்தடுத்து விக்‍கெட்டுகளை இழந்து 191 ரன்களுக்‍கு இந்தியா ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் நியூசிலாந்து அணியை விட இரண்டாவது இன்னிங்சில் வெறும் 8 ரன்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2-வது ஓவரிலேயே சுலபமாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி க்ரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00