வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்து அணி அபார வெற்றி

Jul 21 2020 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. 3-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி, 4-வது நாளில் 287 ரன்களில் 'ஆல்அவுட்' ஆனது. பின்னர் 182 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, அன்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி நாளில், 2-வது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து, 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இதனை அடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி, 198 ரன்களில் 'ஆல்-அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் 24-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00