இந்தியாவில் அடுத்த ஆண்டுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் - பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தகவல்

Aug 23 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் அடுத்த ஆண்டுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என பி.சி.சி.ஐ தலைவர் திரு.சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. உள்ளூர் போட்டிகளும் நடைபெறவில்லை. உள்ளூர் போட்டிகள் எப்போது நடைபெறும், சர்வதேச போட்டிகள் இந்தியாவில் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்த பின்னர், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பி.சி.சி.ஐ தலைவர் திரு.செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணி, இந்தாண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர், அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில், இந்தியா வரும் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடும் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கடுத்து ஏப்ரல் மாதத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என்றும், கூடிய விரைவில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேசமயம், வீரர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியம் என்றும் திரு. கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00