ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் : இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இணைந்து வழங்கப்பட்டது

Aug 31 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இணைந்து வழங்கப்பட்டது. பட்டம் வென்ற இருநாட்டு வீரர்களுக்கும் பிரதமர் திரு.மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FIDE Chess Olympiad இறுதிப்போட்டிக்குள் இந்திய அணி முதல்முறையாக முன்னேறியது. கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் இந்தியா - ரஷியா அணிகள் மோதின. முதல் சுற்று 3-3 என டிராவில் முடிந்தது. அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சினையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இரண்டு இந்திய வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் காய்களை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டதால், தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியா இதனை எதிர்த்து முறையிட்டது. அதன்பின் இந்தியாவும், ரஷியாவும் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய-ரஷிய வீரர்களுக்கு பிரதமர் திரு. மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரரக்ளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது என்றும், அவர்களின் வெற்றி, மற்ற செஸ் வீரர்களுக்கு நிச்சயம் ஊக்கத்தை அளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ரஷிய அணியினருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00