அபுதாபியில் நடைபெற்ற 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் : முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி

Sep 20 2020 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
அபுதாபியில் நடைபெற்ற 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில், மும்பைக்‍கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை அணிக்கு சவுரப் திவாரி, குயின்டன் டி காக் கைகொடுக்க, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் லுங்கிடி 3, ஜடேஜா, தீபக் சகார் தலா 2 தலா இரு விக்‍கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. வாட்சன் 4 ரன்களிலும், முரளி விஜய் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய அம்பதி ராயுடு - டுபிளசி ஜோடி, அபாரமாக ஆடியது. அம்பதி ராயுடு 71 ரன்களும், டுபிளசி 58 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதன்மூலம் சென்னை அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் இன்று நடைபெறும் 2-வது லீக்‍ ஆட்டத்தில், டெல்லி அணியை, பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00