ஷார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டம் - 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது டெல்லி அணி

Oct 4 2020 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியில், 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது ஆட்டம், ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர், 38 பந்தில் 88 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்‍க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், மார்கன் - திரிபாதி ஜோடி 31 பந்தில் 78 ரன்கள் குவித்து அசத்தியது. எனினும், கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00