பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டி : 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை அணி

Oct 5 2020 9:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியில், 10 விக்‍கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

துபாயில் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 18-வது லீக் ஆட்டத்தில், எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் செய்தது. 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கே.எல்.ராகுல் 63 ரன்கள் எடுத்தார்.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்‍குடன் பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் பிளெஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஞ்சாப் வீரர்களின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் சிதறடித்ததால், 17-வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து, 10 விக்‍கெட் வித்தியாத்தில் சென்னை அணி அபார வெற்றிபெற்றது. வாட்சன் 83 ரன்களும், பிளெஸ்சிஸ் 87 ரன்களும் குவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00