ஐபிஎல் கிரிக்‍கெட் தொடரில், பஞ்சாப் அணிக்‍கு எதிரான 22-வது லீக் ஆட்டம் : 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதரபாத் அணி வெற்றி

Oct 9 2020 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐபிஎல் கிரிக்‍கெட் தொடரில், பஞ்சாப் அணிக்‍கு எதிரான ஆட்டத்தில் ஹைதரபாத் அணிக்‍கு 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்‍க ஆட்டக்‍காரர்களாக களமிறங்கிய David Warner, Jonny Bairstow ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டம் மூலம் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 40 பந்துகளை சந்தித்த David Warner 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். Jonny Bairstow 55 பந்துகளில் 6 சிக்‍சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 97 ரன்களில் அவுட்டாகி, பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, 20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்‍கெட் இழப்புக்‍கு 201 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் Ravi Bishnoi அபாரமாக பந்து வீசி 3 விக்‍கெட்களை எடுத்தார்.

இதனையடுத்து, 202 ரன்கள் இலக்‍குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்‍கு, தொடக்‍கத்திலேயே 3 விக்‍கெட்டுகள் சரிந்ததால் ஏமாற்றம் அளித்தது. கேப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் Prabhsimran Singh ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த Nicholas Pooran, தனது அதிரடி ஆட்டம் மூலம் ஹைதராபாத் அணிக்‍கு நெருக்‍கடியை ஏற்படுத்தினார். 37 பந்துகளை சந்தித்த அவர், 7 சிக்‍சர்கள் மற்றும் 5 பவுண்டரிக​ளுடன் 77 ரன்களை விளாசியபோது, ரஷித் கான் பந்தில் அவுட்டாகினர். இதனையடுத்து வந்த வீரர்கள், ஹைதரபாத் பந்துவீச்சை சமாளிக்‍க முடியாமல் ஒற்றை இலக்‍க எண்களில் பெவிலியன் திரும்ப, இறுதியில் பஞ்சாப் அணி 16 புள்ளி 5 ஓவர்களில் அனைத்து விக்‍கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதரபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இதனிடையே ஷார்ஜாவில் இன்று நடைபெறும் 23வது லீக்‍ ஆட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00