ஒலிம்பிக்‍ போட்டியில் இருந்து சீனாவை நீக்‍க வலி​யுறுத்தல் - கொரோனாவை உலக நாடுகளுக்‍கு பரப்பியதாக அமெரிக்‍கா குற்றச்சாட்டு

Oct 9 2020 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரசை உலக நாடுகளுக்‍கு பரபரப்பியது, உய்குர் முஸ்லிம்களை அடக்குமுறைக்கு ஆளாக்கியது தொடர்பாக சீனாவை, ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரசை அமெரிக்காவிலும், இதர நாடுகளிலும் பரப்பியதற்கு சீனா, மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என அமெரிக்‍க அதிபர் டிரம்ப், 'டுவிட்டரில்' தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு, கொரோனா தோன்றியது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சீனாவின் வெளிப்படையற்ற, தவறான செயல்பாடுகளால், கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உலக அளவில் பரவி, லட்சக்கணக்கான மக்கள் உயிரைப் பறித்துள்ளது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதோடு, உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. சீனா செய்த குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைப்போம் எனவும் அந்த அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாகி வருவது மற்றும் கொரோனா வைரசை உலக நாடுகளுக்‍கு பரப்பியது தொடர்பான கண்டன தீர்மானத்தை விரைந்து நிறைவேற்றும்படி, அமெரிக்க செனட் உறுப்பினர் ரிக் ஸ்காட், வெளியுறவுக்கான செனட் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த தீர்மானத்தில், ஒலிம்பிக் போட்டியில் இருந்து சீனாவை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00