அரசாங்க வேலை போல் நினைத்து விளையாடுகிறார்கள் - சி.எஸ்.கே. வீரர்கள் குறித்து சேவாக் விமர்சனம்

Oct 9 2020 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள், அணியில் விளையாடுவதை அரசு வேலை போல் நினைப்பதாகவும், நன்றாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் எப்படியும் சம்பளம் வந்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியும் எனவும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கடந்த 7-ம் தேதி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதால், 168 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய சி.எஸ்.கே. அணி 157 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த போட்டியில், கேதார் ஜாதவின் ஆட்டம் மிகவும் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக், சி.எஸ்.கே. அணியின் சில வீரர்கள் அரசாங்க வேலை போல் நினைத்துக் கொண்டு விளையாடுவதாகவும், விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் சம்பளம் வந்து விடும் என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் விமர்சித்துள்ளார். 168 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான் எனவும், கேதார் ஜாதவும், ரவீந்திர ஜடேஜாவும் அதற்கு உதவவில்லை எனவும், சேவாக் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00