ராஜஸ்தானை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி - புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

Oct 10 2020 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். கிரிக்‍கெட் தொடரில், ராஜஸ்தானுக்‍கு எதிரான ஆட்டத்தில், டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 5 ரன்னிலும், பிரித்வி ஷா 19 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 22 ரன்னிலும், ரிஷப் பண்ட் 5 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹெட்மையர் ஜோடி, அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 30 பந்தில் 39 ரன்களிலும், ஹெட்மையர் 24 பந்தில் 45 ரன்களிலும் வெளியேற, டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 34 ரன்களுடனும், அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 24 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய வீரர்கள், டெல்லியின் அணியின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்‍க முடியாமல், சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ராகுல் டெவாட்டியா கடைசி வரை போராடி, 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில், Rabada பந்தில் அவுட்டானார். இறுதியில் ராஜஸ்தான் அணி, 19 புள்ளி 4 ஓவர்களில் அனைத்து விக்‍கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி பெற்றது. அசத்தலாக பந்து வீசிய ரபாடா 3 விக்கெட்டும், அஷ்வின் மற்றும் ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டையும் எடுத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00